தேவையான பொருட்கள்:
ஆட்டுக்கால் – 4
இஞ்சி பூண்டு நசுக்கியது – சிறிதளவு
மிளகு – கொஞ்சம்
சீரகம் – கொஞ்சம்
மல்லி – சிறிது
வெங்காயம் – 3
தக்காளி – 3
பச்சை மிளகாய் – 2
மல்லித்தூள்- சிறிது
மிளகாய்த்தூள்- சிறிது
மஞ்சள்தூள் – சிறிது
பட்டை கிராம்பு சோம்பு – கொஞ்சம்
உப்பு – தேவையான அளவு
எண்ணை – தேவையான அளவு
கொத்தமல்லி தழை – தூவ
செய்முறை:
வாணலியில் எண்ணைய் ஊற்றி காய்ந்த்தும் பட்டை கிராம்பு சோம்பு, பொடித்து வைத்திருக்கும் மிளகு சீரகம் தனியா இவைகளைப் போடவும்.வெங்காயம் பச்சை மிளகாய் இஞ்சி பூண்டு, தக்காளி போட்டு வதக்கவும்.கழுவிய ஆட்டுக்காலை போட்டு ஐந்து நிமிடம் வதக்கவும்.மல்லித்தூள் மிளகாய், மஞ்சள் தூள் சிறிதளவு சேர்க்கவும்.உப்பு சேர்த்து தேவைக்கும் அதிகமாகவே நீர் ஊற்றி வேக வைக்கவும்.மிளகுத்தூள் சிறிதளவு சேர்த்து விடவும்.
அடுப்பு சிம்மில் இருந்தால் போதும் ஒரு அரைமணி நேரம் நன்றாக கால் வேகும் வரை வைத்து இருக்கவும்.தண்ணீரும் சிறிதளவு குறைந்து விடும்.உப்பின் சுவை அதிகமானால் நீர் சேர்த்து கொதிக்க வைத்துக்கொள்ளலாம்.பின் மல்லித்தழை தூவிவிடவும்.
சுவையான சூப் ரெடி..