மூடப்பட்ட 252 கேன்வாட்டர் நிலையங்களை மீண்டும் திறக்க கோர்ட் அனுமதி.

தமிழகத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன் மூடப்பட்ட 252 கேன் வாட்டர் நிறுவனங்களை மீண்டும் திறக்க பசுமைத் தீர்ப்பாயம் அனுமதி வழங்கியுள்ளது.

கேன் வாட்டர் நிறுவனங்கள் நிலத்தடி நீரை அளவுக்கு அதிகமாக எடுத்து பயன்படுத்துவதாக புகார் கூறி 252 கேன் வாட்டர் நிறுவனங்களை மூட பசுமைத்தீர்ப்பாயம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் இதுகுறித்த வழக்கு ஒன்று இன்று சென்னை நீதிமன்றத்தில் விசாரணை செய்யப்பட்டது. அந்த வழக்கில் தமிழக பொதுப்பணித்துரையினர் கடந்த 2009ஆம் ஆண்டு அனுமதி வழங்கிய அளவுப்படிதான் நிலத்தடி நீரை எடுப்பதாகவும், மேலும் தாங்கள் எடுக்கும் நிலத்தடி நீரின் அளவு ஒரு சதவீதம் மட்டுமே என்று பதில் மனு தாக்கல் செய்திருந்தனர்.

இந்த பதில் மனுவின் கோரிக்கை ஏற்கப்பட்டு மூடப்பட்ட 252 கேன்வாட்டர் நிறுவனங்களை தற்காலிகமாக திறக்கலாம் என நீதிபதி உத்தரவிட்டார். இந்த உத்தரவை தொடர்ந்து பசுமை தீர்ப்பாயமும் கேன் வாட்டர் நிறுவனங்களை திறக்க தற்காலிக அனுமதி வழங்கியுள்ளது. இருப்பினும் இந்த வழக்கு தொடர்ந்து நடந்து வரும் என தெரிகிறது

Leave a Reply