இலங்கையில் தற்போதுள்ள ஆட்சியை அகற்றிவிட்டு தங்களுகு சாதகமான ஆட்சியை ஏற்படுத்த அமெரிக்க சதி செய்வதாக அதிபர் ராஜபக்சேவின் தம்பியும், பாதுகாப்புத்துறைச் செயலாளர் கோத்தபய ராஜபக்சே குற்றம்சாட்டியுள்ளார். இதனால் இலங்கையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்திய பெருங்கடல் பகுதியில் அமெரிக்கா தனது ஆதிக்கத்தை செலுத்த தொடங்கிவிட்டது என்றும் அதன் முதல்படியாக இலங்கையில் ராஜபக்சேவின் ஆட்சிய அகற்ற சதி நடவடிக்கைகளில் அமெரிக்கா ஈடுபட்டு வருவதாக அவர் மேலும் கூறிய்ள்ளார்.
ஜெனிவாவில் இலங்கைக்கு எதிராக அடுத்தமாதம் அமெரிக்கா கொண்டு வரப்படவுள்ள தீர்மானம் நாட்டுக்கு எதிரானது என கூறுவதில் அர்த்தம் இல்லை. அது இறுதிப்போரில் நடைபெற்றதாக கூறப்படும் சம்பவங்களை பற்றியது மட்டுமே என்றும் கூறியுள்ளார்.
ஜெனிவாவில் அடுத்தமாதம் ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை எப்படி முறியடிப்பது என்பது எங்களுக்கு தெரியும் என்றும் கோத்தபய ராஜபக்சே கூறியுள்ளார்.