பொலிவியாவில் பயங்கர வெள்ளம். விளைநிலங்கள் மூழ்கின.

பொலிவியா நாட்டில் தொடர்ந்து இரண்டு வாரங்களாக கனமழை பெய்துவருவதால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அந்நாட்டின் ஆயிரக்கணக்கான மக்கள் பாதிப்பு அடைந்துள்ளனர். சுமார் 54000 குடும்பங்கள் வெள்ளத்தில் தத்தளிப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இதுவரை சுமார் 17000 ஹெக்டேர் விவசாய நிலங்கள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளதாகவும், தொடர்ந்து மழை பெய்து வருவதால் பயிர்கள் அனைத்தும் நீரில் மூழ்கி பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் பொலிவிய அரசு அறிவித்துள்ளது.

பாதிக்கப்பட்ட பகுதி மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கும் பணியில் மீட்புப்படையினர் ஈடுபட்டுள்ளனர். இருப்பினும் சிலர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற மறுப்பதால், பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

[embedplusvideo height=”300″ width=”500″ editlink=”http://bit.ly/1dvDoPS” standard=”http://www.youtube.com/v/NUoOL7ITrmg?fs=1″ vars=”ytid=NUoOL7ITrmg&width=500&height=300&start=&stop=&rs=w&hd=0&autoplay=0&react=1&chapters=&notes=” id=”ep6376″ /]

Leave a Reply