வரதட்சணை கொடுமை. சென்னை பெண் மீது அமிலம் வீச்சு.

சென்னை மாதவரத்தை சேர்ந்த பெண் மீது மாமியாரின் உச்சக்கட்ட கொடுமையாக அமிலம் வீசப்பட்டதால், அவருக்கு கண் பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

சென்னை மாதவரத்தை சேர்ந்த பாண்டியம்மாள் என்ற பெண்ணை அவரது மாமியார் கடந்த சில வருடங்களாக வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி வந்ததாகவும், அதன் உச்சகட்டமாக கடந்த திங்கட்கிழமை, தனது மாமியார் கணவரின் சகோதரியை தூண்டிவிட்டு, தன்மீது அமிலத்தை வீசியதாகவும் சென்னை மாதவரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

பாண்டியம்மாளுக்கு தற்போது ஒரு கண்ணின் பார்வை பறிபோயுள்ளது. மேலும் அவர் இரும்புத்தடியாலும் தாக்கப்பட்டிருப்பதால் உடல் முழுவதும் காயங்கள் ஏற்பட்டுள்ளன. தற்போது அவர் சென்னை எழும்பூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

பாண்டியம்மாளின் புகாரின் பேரில் போலீஸார், அவரது கணவரின் சகோதரி மீனாள் என்பவரை கைது செய்துள்ளனர். மாமியார் உலகம்மாள் தலைமறைவாக உள்ளதால் அவரை போலீஸார் தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Leave a Reply