சென்னையில் நேற்று மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் நடந்தது. கோயம்பேடு ரயில் நிலையத்தில் தொடங்கி அசோக்நகர் வரை 6 கி.மீ தூரத்திற்கு இந்த சோதனை ஓட்டம் நடந்தது. இதில் பத்திரிகையாளர்களும் அழைத்து செல்லப்பட்டனர்.
சென்னை மெட்ரோ ரயில்கள் மணிக்கு 80 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லக்கூடியது என்றும், தானியங்கி கதவுகளுடன் கூடிய முற்றிலும் குளிர்சாதன வசதியுடன் இந்த ரயில் அமைக்கப்பட்டுள்ளது. அவசர காலத்தில் ரயில் ஓட்டுனருடன் பயணிகள் தொடர்பு கொள்ளவும் வசதி உள்ளது.
1200 பயணிகள் இந்த மெட்ரோ ரயிலில் பயணம் செய்யலாம்., பெண்களுக்கு தனியாக ஒரு ரயில் பெட்டியும் உண்டு. ஒவ்வொரு ரயில் நிலையங்களை தெரிவிக்கும் டிஜிட்டல் பலகைகளும் உள்ளது. அந்தந்த ரயில் வந்தவுடன் டிஜிட்டல் பலகையில் லைட் எரியும் வண்ணம் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்த மெட்ரோ ரயில் பெட்டிகள் பிரேசில் நாட்டில் இருந்தும், ஆந்திர மாநில தடா என்ற நகரத்தில் இருந்து வரவழைக்கபப்ட்டுள்ளது.
[embedplusvideo height=”300″ width=”500″ editlink=”http://bit.ly/1mkgWir” standard=”http://www.youtube.com/v/DqrdQ2lHywI?fs=1″ vars=”ytid=DqrdQ2lHywI&width=500&height=300&start=&stop=&rs=w&hd=0&autoplay=0&react=1&chapters=¬es=” id=”ep1177″ /]