சென்னை அருகே உள்ள இருங்காட்டுக்கொட்டையில் நேற்று பார்முலா 2000 சர்வதேச கார்பந்தயம் நடைபெற்றது. இதில் கலந்து கொள்வதற்காக சுமார் 10 நாடுகளை சேர்ந்த கார் பந்தய வீரர்கள் சென்னை வந்தனர்.
இந்த போட்டியில் தமிழக வீரர் நரேன் கார்த்திகேயனும் கலந்து கொண்டார். இந்த போட்டியில் நரேன் முதலிடத்தை பிடித்து சாதனை செய்தார்.15 ஆண்டுகளுக்கு பின்னர் சொந்த மண்ணில் நரேன் இந்த சாதனையை செய்துள்ளார். வெற்றி பெற்ற நரேனுக்கு பாராட்டுக்கள் குவிந்தவண்ணம் உள்ளது.
இந்த போட்டி 60 சுற்றுகள் கொண்டதாக இருந்தது. முதல் சுற்றில் இருந்தே நரேன் கார்த்திகேயன் முன்னணியில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.