தென்னிந்திய மகளிர் கபடி: மதுரை அணி சாம்பியன்.

தென்னிந்திய அளவிலான மகளிருக்கான கபடிப்போட்டி வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் நடைபெற்று வருகிறது. நேற்று நடந்த இறுதியாட்டத்தில் திண்டுக்கல் அணியை தோற்கடித்து மதுரை அணி சாம்பியன் பட்டம் வென்றது.

சென்னை, பெங்களூர், மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட 17 மகளிர் கபடி அணிகள் தென்னிந்திய கபடி போட்டியில் கலந்து கொண்டன. இந்த போட்டியின் இறுதியாட்டம் நேற்று மிகவும் விறுவிறுப்பாக நடந்தது. இதில் மதுரை அணி மிக அபாரமாக விளையாடி திண்டுக்கல் அணியை 35-29 என்ற புள்ளிக்கணக்கில் தோல்வியுற செய்து சாம்பியன் பட்டம் வென்றது.

சாம்பியன் பட்டம் வென்ற மதுரை மகளிர் கபடி அணிக்கு பரிசுக்கோப்பையுடன் ரூ,50,000 ரொக்கப்பரிசும் வழங்கப்பட்டது.

Leave a Reply