ராஜீவ் கொலை வழக்கு. மூன்று பேர்களுக்கு தூக்கு ரத்து. பரபரப்பு தீர்ப்பு.

 

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோர்களுக்கு வழங்கி வந்த தூக்கு தண்டனையை ரத்து செய்தது உச்சநீதிமன்றம்.

இன்று காலை 10.30 மணியளவில் தலைமை நீதிபதி சதாசிவம் தலைமையிலான 3 நீதிபதிகள் அடங்கிய அமர்வு, இந்த வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியது. கருணை மனு மீது முடிவெடுக்க தாமதம் ஏற்பட்டதைக் காரணம் காட்டி மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டுள்ளது.

கருணை மனு மீதான தாமத நடவடிக்கையை அடுத்து ஏற்கனவே சில வழக்குகளீல் மரண தண்டனை ரத்து செய்யப்பட்டிருப்பதை சுட்டிக்காட்டிய நீதிபதிகள், அதே சலுகையை இந்த மூவருக்கும் வழங்க ஒப்புக்கொண்டுள்ள்து. இதையடுத்த மூவரின் மரணதண்டனை ரத்து செய்யப்படுகிறது. அவர்கள் மூவருக்கு ஆயுள் தண்டனையாக குறைத்து தீர்ப்பு வழங்கப்பட்டது.

Leave a Reply