பிரபல பாலிவுட் இயக்குனர் பால்கி இயக்கும் படத்தில் அறிமுகம் ஆகிறார் கமல்ஹாசனின் இரண்டாவது மகள் அக்ஷரா ஹாசன். இந்த படத்தில் அவர் தனுஷுக்கு ஜோடியாக நடிக்கிறார். இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் அமிதாப் பச்சன் நடிக்கிறார். முதல் படத்திலேயே அமிதாப் ,மற்றும் தனுஷுடன் நடிக்க இருப்பதால் தனக்கு மிகவும் நடுக்கமாக இருப்பதாக அக்ஷரா ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
தனுஷுடன் ஏற்கனவே ஜோடியாக நடித்துள்ள தனது சகோதரி ஸ்ருதிஹாசனிடம் அவரை பற்றி கேட்டு தெரிந்து கொண்டதாகவும், அதனால் படப்பிடிப்பு நேரத்தில் தான் நடந்து கொள்ளவேண்டிய விதம் குறித்து ஸ்ருதி தனக்கு கூறிய ஆலோசனைகளை நினைவில் வைத்திருப்பதாகவும் கூறிய அக்ஷரா ஹாசன், ஆனாலும் படப்பிடிப்பு நாள் நெருங்க நெருங்க மிகவும் பதட்டமாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.