மக்களவையில் தெலுங்கானா மசோதாவை இன்று உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே, கடும் அமளிகளுக்கிடையே தாக்கல் செய்தார். இதை தொடர்ந்து இந்த மசோதா மீதான விவாதம் நடைபெற வாய்ப்பில்லை என்பதால் விவாதம் நடத்தாமலேயே இந்த மசோதாவை நிறைவேற்ற மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் டெல்லி நாடாளுமன்றத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தெலுங்கானா மசோதா நிறைவேறியதை அடுத்து தனது பதவியை ராஜினாமா செய்யப்போவதாக ஆந்திர முதல்வர் கிரண்குமார் ரெட்டி கூறிவந்துள்ளார். இந்த தகவலை சட்ட அமைச்சர் பிரதாப் ரெட்டி உறுதி செய்துள்ளார். முதல்வரை தொடர்ந்து அமைச்சர்கள் அனைவரும் பதவி விலக முடிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார். கிரண்குமார் ரெட்டி தனிக்கட்சி ஆரம்பிப்பார் என கூறப்படுகிறது.
முன்னதாக தெலுங்கானா மசோதா தாக்கல் செய்யப்படுவதற்கு முன் எம்.பிக்களின் கடும் அமளியால் மக்களவை இருமுறை ஒத்திவைக்கப்பட்டது.