கோலிசோடா தயாரிப்பாளர் என்னை ஏமாற்றிவிட்டார். பவர்ஸ்டார்

சமீபத்தில் ரிலீஸாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம் ‘கோலிசோடா’. இந்த படத்தில் நான் ஒரு பாடல் காட்சியில் நடித்துள்ளேன். ஆறு நாட்கள் நடிக்கவேண்டிய காட்சிகளில் நான் மூன்று நாட்கள் நடித்துக்கொடுத்துவிட்டேன். நான் நடித்த சில காட்சிகளும் படத்தில் இடம்பெற்றுள்ளன. ஆனால் எனக்கு பேசிய தொகையை இன்னும் சம்பளமாக அந்த படத்தின் தயாரிப்பாளர் கொடுக்காமல் என்னை ஏமாற்றிவிட்டார். இவ்வாறு அதிர்ச்சி புகாரை கூறியிருப்பவர் பவர்ஸ்டார் ஸ்ரீனிவாசன்.

இதேபோன்று ‘யா யா’ என்ற படத்திலும் தான் நடித்திருப்பதாகவும், ஆனால் அவர்களும் எனக்கு தரவேண்டிய சம்பளத்தை தராமல் ஏமாற்றி வருவதாகவும் கூறிய பவர்ஸ்டார், இதுகுறித்து, தயாரிப்பாளர் சங்கத்தில் வழக்கு தொடருதாகவும் கூறியுள்ளார்.

என்னுடைய கோடிக்கணக்கான ரசிகர்களுக்காக நான் இன்னும் பல படங்களை நடிப்பேன். என்னுடைய வளர்ச்சியை தடுக்க சிலர் திட்டம் தீட்டுகின்றனர். ஆனால் அவர்களுடைய சதித்திட்டம் பலிக்காது. நான் மீண்டும் விஸ்வரூபம் எடுப்பேன். என்று கூறியுள்ளார்.

Leave a Reply