ராஜிவ் கொலை வழக்கில் தூக்குத் தண்டனை ரத்து செய்யப்பட்ட சாந்தன், முருகன், பேரறிவாளனை தமிழக அரசு விடுதலை செய்ய உத்தரவு பிறப்பித்துள்ளது
நேற்று உச்சநீதிமன்றத்தில் தூக்கு தண்டனையை ரத்து செய்து ஆயுள் தண்டனையாக மாற்றி தீர்ப்பு அளிக்கப்பட்டது. மேலும் அவர்கள் மூவரையும் விடுதலை செய்யும் முடிவை தமிழக அரசின் ககயில் உள்ளது என்றும் பரபரப்பாக தீர்ப்பு அளித்தது. இதையொட்டி தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் முருகன், சாந்தன், பேரறிவாளன் மற்றும் நளினியையும் விடுதலை செய்ய வேண்டும் என தமிழக முதல்வரிடம் கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து இன்று தமிழக சட்டப்பேரவையில் விதி எண் 110ன் கீழ் பேசிய முதல்வர் ஜெயலலிதா, முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி, ஜெயச்சந்திரன், ராபர்ட் பயஸ் ஆகிய ஆறுபேரும் விடுதலை செய்யப்படுவார்கள் என்று தெரிவித்தார். 6 பேர்களையும் விடுதலை செய்ய மத்திய அரசுக்கு முதலில் பரிந்துரை செய்வோம் என்றும், மத்திய அரசு 3 நாட்களில் பதில் அளிக்காவிட்டால் தமிழக அரசே அவர்கள் அனைவரையும் விடுதலை செய்யும் என கூறினார்.
தமிழக முதல்வரின் இந்த அதிரடி அறிவிப்பால் உலகத்தமிழர்கள் அனைவரும் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.