நேற்று மக்களவையில் கடும் எதிர்ப்பையும் மீறி தெலுங்கானா மசோதா நிறைவேறியதை தொடர்ந்து ஆந்திர மாநில முதல்வர் கிரண்குமார் ரெட்டி இன்று தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். இன்று தனது ராஜினாமா கடிதத்தை ஆளுனர் நரசிம்மனிடம் கொடுத்தார்.
அவருடன் சேர்ந்து அவருடைய அமைச்சர்களும் ராஜினாமா செய்தனர். முதல்வர் பதவியில் இருந்து விலகியதோடு, காங்கிரஸில் இருந்தும் கிரண்குமார் ரெட்டி விலகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தெலுங்கு நடிகரும், மத்திய சுற்றுலாத்துறை அமைச்சருமான சிரஞ்சிவி, தெலுங்கானா மசோதா நிறைவேறியுள்ளதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
மேலும் தெலங்கானா மசோதா நிறைவேற்றப்பட்ட விதம் குறித்து வருத்தம் தெரிவித்த சிரஞ்சீவி, சீமாந்திரா பகுதி மக்களின் உணர்வுகள் பரிசீலிக்கப்படவில்லை என்று குற்றம்சாட்டினார். சிரஞ்சிவியும் தனது பதவியை தெலுங்கானா பிரச்சனைக்காக ராஜினாமா செய்வார் என கூறப்படுகிறது.