7 பேர்கள் விடுதலை. சுப்ரீம் கோர்ட்டை அணுக மத்திய அரசு அதிரடி முடிவு.

மரணதண்டனை விதிக்கப்பட்டு பின்னர் ஆயுள் தண்டனனயாக மாற்றப்பட்ட மூன்று பேர்கள் உள்பட 7 பேர்களை விடுதலை செய்வதாக நேற்று தமிழக சட்டமன்றத்தில் முதல்வர் செய்த அறிவிப்புக்கு அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. சட்டத்தை மீறி அரசியல் உள்நோக்கங்களுக்காக இதுபோன்ற பொறுப்பேற்ற முறையில் முடிவுகளை எடுத்தால் மற்ற முதல்வர்கலும் இதை பின்பற்றும் அபாயம் இருப்பதாக காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்ட மூன்று பேர்களை மட்டும் விடுதலை செய்வது தொடர்பாக தமிழக அரசு முடிவெடுக்கலாம் என்றுதான் உச்சநீதிமன்றம் அறிவித்திருந்தது. ஆனால் தமிழக அரசோ, மேலும் 4 ஆயுள் தண்டனை கைதிகளையும் சேர்த்து விடுதலை செய்வதாக அறிவித்துள்ளது சட்டவிரோதம் என்றும் கூறியுள்ளது.

இதனிடையே பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகிய 3 பேர்களை விடுவிப்பது தொடர்பாக வழங்கப்பட்ட தீர்ப்பு குறித்து, சுப்ரீம் கோர்ட்டில் விளக்கம் கேட்டு இன்று மனுத் தாக்கல் செய்யவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் தமிழக அரசு தன் அதிகாரத்தை பயன்படுத்தி ராஜீவ் கொலையாளிகலை விடுவிக்க முடியுமா என்பது குறித்தும் சட்ட அமைச்சகம் விரிவான தகவல்களை திரட்ட முடிவு செய்துள்ளது. இதனால் 3 பேர்கள் உள்பட 7 பேர்களின் விடுதலையில் சிக்கல் ஏற்படுமோ என உலகத்தமிழர்கள் அச்சம் கொண்டுள்ளனர்.

Leave a Reply