பாரதிய ஜனதாவுக்கு ரஜினி ஆதரவா? இல.கணேசன் விளக்கம்.

 

ஒவ்வொரு முறை தேர்தல் வரும்போது நடிகர் ரஜினிகாந்த் யாருக்கு வாய்ஸ் கொடுப்பார் என்ற பரபரப்பு அரசியல்வாதிகளிடையே பற்றிக்கொள்ளும். இம்முறையும் ரஜினி குறித்த பேச்சுக்களை அரசியல்வாதிகள் ஆரம்பித்துவிட்டனர்.

பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த இல.கணேசன் இன்று செய்தியாளர்களிடையே பேசியபோது, ‘ரஜினிகாந்த் எல்லோருக்கும் பொதுவானவர் என்றாலும், அவருக்கு நரேந்திரமோடியின் மீது மிகுந்த மரியாதை உள்ளது. தேர்தல் நேரத்தில் அவர் கண்டிப்பாக பாரதிய ஜனதாவுக்குத்தான் ஆதரவு கொடுப்பார் என்ற நம்பிக்கையில் நாங்கள் இருக்கின்றோம்.

நாட்டு நலனில் அக்கறை கொண்டவர் ரஜினி. எனவே தேர்தல் சமயத்தில் அவர் இந்த முடிவை செய்வார். ஆனால் இது விஷயமாக இதுவரை நாங்கள் அணுகவில்லை. அதற்கான நேரமும் இதுவல்ல. நேரம் வரும் போது அவரையும் அணுகி ஆதரவு கேட்போம் என்று கூறியுள்ளார்.

விரைவில் பாரதிய ஜனதாவின் தமிழக தலைவர்கள் ரஜினியை ‘சோ’ உதவியுடன் சந்திப்பார்கள் என்று கூறப்படுகிறது.

Leave a Reply