ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்தின் மூன்றாவது கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் திங்கட்கிழமை முதல் தொடங்க இருக்கின்றது. அங்கு சுமார் 20 நாட்கள் படப்பிடிப்பு நடக்கும் என படக்குழுவினர் கூறுகின்றனர்.
விஜய் நடிக்கும் முருகதாஸ் படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு கொல்கத்தாவிலும், பின்னர் இரண்டாவது கட்ட படப்பிடிப்பு சென்னை விமான நிலையத்திலும் நடைபெற்றது. தற்போது ஐதராபாத் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் மூன்றாவது கட்ட படப்பிடிப்பிற்கு தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. அங்கு ராஜமுந்திரியில் உள்ள சிறை போன்று செட் அமைக்கும் பணி தற்போது முடிவடைந்துள்ளது. இந்த படத்தில் வில்லனாக நடிக்கும் டோட்டா ராய் செளத்ரி சிறையில் இருந்து தப்பித்து செல்வது போன்றும், அவரை பிடிக்க விஜய் நடத்தும் ஆக்ஷன் காட்சிகள் படமாக்கப்பட உள்ளன.
சென்னையில் விஜய் சமந்தா ஆடிய நடனக்காட்சிகளை போட்டு பார்த்த முருகதாஸுகு மிகவும் திருப்தியாக இருந்ததாகவும், அதே உற்சாகத்தில் ஐதராபாத்திற்கு படப்பிடிப்புக்கு கிளம்புவதாகவும் கூறப்படுகிறது. படக்குழுவினர் அனைவரும் ஐதராபாத்தில் தயாராக உள்ளனர். விஜய், மற்றும் முருகதாஸ் திங்கட்கிழமை வந்தவுடன் படப்பிடிப்பு ஐதரபாத் ஜெயில் செட்டிங்கில் ஆரம்பமாகும்.
முதலில் இந்த ஜெயில் காட்சிகளை ராஜமுந்திரியில் உள்ள நிஜ சிறைச்சாலையிலேயே படமாக்க முருகதாஸ் முடிவு செய்திருந்தார். ஆனால் தெலுங்கானா பிரச்சனையால் படப்பிடிப்புக்குரிய நிலைமை சாதகமாக இல்லாததால், ராமோஜிராவி பிலிம் சிட்டிக்கு மாற்றப்பட்டது.