நமோ டீக்கடைக்கு எதிராக ராகா பால்கடை.

பாரதிய ஜனதாவின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியின் பெயரில் நாடெங்கும் நமோ டீக்கடை திறக்கப்பட்டு, அதை தேர்தல் பிரச்சாரத்திற்கும் பாரதிய ஜனதா கட்சியினர் பயன்படுத்தி வருகின்றனர். நமோ டீக்க்டைக்கு நாளுக்கு நாள் ஆதரவு பெருகிக்கொண்டே போகிறது. இதனால் காங்கிரஸ் கட்சியினர் இதற்கு போட்டியாக ராகா பால் கடையை ஆரம்பித்துள்ளனர்.

ராகா என்பது ராகுல்காந்தி என்பதன் சுருக்கம். நேற்று முதன்முதலாக ராகா பால்கடை உத்தரபிரதேசத்தில் தொடங்கப்பட்டு, ராகுல் காந்தியின் படம் போட்ட பேப்பர் கப்பில் பால் விநியோகம் செய்யப்பட்டது.

இதுகுறித்து உத்தரபிரதேசம், கோரக்பூர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் சையது ஜமால் கூறும்போது, ”நரேந்திர மோடியின் ஒவ்வொரு திட்டத்திற்கும் பதிலடி கொடுக்க நாங்கள் தயாராக இருக்கிறோம். தற்போது கோல்கரில் தொடங்கப்பட்டுள்ள இந்த பிரசாரம், விரைவில் நாடு முழுவதும் விரிவுபடுத்தப்படும்.

மேலும், டீ உடல் நலத்திற்கு நல்லதல்ல. அதே போல் மோடியும் நாட்டு நலனுக்கு நல்லவர் அல்ல , ஆனால் பால் உடலிற்கு வலிமை தரும் அதுபோல ராகுல் காந்தி நாட்டின் வலிமையான தலைவராக திகழ்கிறார் என்று கூறினார்.

இரு கட்சியினர்களும், டீக்கடையும், பால் கடையும் நாடு முழுவதும் திறந்து கொண்டு வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

 

[embedplusvideo height=”300″ width=”500″ editlink=”http://bit.ly/1jmf2Jq” standard=”http://www.youtube.com/v/6BNIfCqyxfk?fs=1″ vars=”ytid=6BNIfCqyxfk&width=500&height=300&start=&stop=&rs=w&hd=0&autoplay=0&react=1&chapters=&notes=” id=”ep2147″ /]

Leave a Reply