சென்னையில் ராம்ஜெத் மலானி திடீர் மயக்கம்.

ராஜீவ் கொலை வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய மூவர்களுக்கு மரணதண்டனையில் இருந்து ஆயுள் தண்டனையாக மாற்ற வழக்காடிய பிரபல வழக்கறிஞர் ராம்ஜெத் மலானி நேற்று சென்னை வந்தார். சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் அவர் தங்கியிருந்தபோது இன்று காலை அவரது அறையில் தவறி கிழே விழுந்தார். அதனால் லேசான காயம் அடைந்த அவர் மயக்கமுற்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மயக்கமடைந்த ராம்ஜெத்மலானியை அவரது உதவியாளர்கள் சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். தற்போது ராம்ஜெத்மலானி உடல்நிலை தேறி நலமாக இருப்பதாக அவருக்கு சிகிச்சை செய்த மருத்துவர்கள் தெரிவித்தனர்.

Leave a Reply