ராகுல்காந்தி உருவப்படம் எரிக்க முயற்சி. மதுரையில் பரபரப்பு.

முருகன், சாந்தன், பேரறிவாளன் உள்பட 7 பேர்களை தாயுள்ளத்தோடு விடுதலை செய்ய முன்வந்த முதல்வர் ஜெயலலிதாவின் உருவப்படத்தை எரித்ததோடு, அவர்களின் விடுதலைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் காங்கிரஸ் கட்சியினரை கண்டித்து இன்று மதுரையில் ராகுல்காந்தி உருவப்படத்தை எரிக்க முயற்சி செய்த நாம் தமிழர் கட்சியினர்களை தமிழக போலீஸார் அடித்து விரட்டினர். இதனால் மதுரையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இன்று காலை மதுரை, பெரியார் பேருந்து நிலையம் அருகில் நாம் தமிழர் கட்சியின் மாவட்டத்தலைவர் சிவானந்தம் தலைமையில் நூற்றுக்கணக்கானோர் காங்கிரஸ் கட்சிக்கெதிராக கோஷம் போட்டு ராகுல் காந்தியின் கொடும்பாவியை எரிக்க முயற்சித்தனர். அப்போது, தமிழக காவல்துறையினர், அவர்களை தடுத்து நிறுத்தி கைது செய்தனர். கொடும்பாவி கொண்டு வந்தவரை அடித்து விரட்டியடித்தனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் தமிழக முதல்வரின் கொடும்பாவியை எரித்த காங்கிரஸ் கட்சியை எதிர்த்துதான் எங்கள் ஆர்ப்பாட்டம். ஆனால் தமிழக காவல்துறையே எங்களை அடித்து விரட்டுவது அதிர்ச்சியாக உள்ளது என தெரிவித்தனர். இவர்கள் தமிழக காவல்துறையா அல்லது காங்கிரஸ் காவல்துறையா? என்று கேட்டனர்.

இந்த சம்பவம் காரணமாக மதுரையில் சிறிதுநேரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Leave a Reply