இன்று தமிழகம் முழுவதும் போலியோ சொட்டு மருந்து முகாம்

இன்று தமிழ்நாடு முழுவதும் போலியோ சொட்டு மருந்து முகாம நடைபெறுகிறது. ஐந்து வயதுக்கு குறைவான குழந்தைகள் அனைவருக்கும் இந்த போலியோ சொட்டு மருந்து அளிக்கப்படும்.

தமிழகத்தில் உள்ள 43,051 இடங்களில் உள்ள  ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள் ஆகியவற்றில் இலவசமாக கிடைக்கும் இந்த போலியோ சொட்டு மருந்தை தங்கள் குழந்தைகளுக்கு கொடுக்கும்படி சுகாதாரத்துறை அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர். தமிழகம் போலியோ இல்லாத மாநிலமாக மாற்றுவதற்காகவே ஒவ்வொரு வருடமும் இந்த போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறுவதாக அந்த அதிகாரிகள் கூறினர்.

ஒவ்வொரு போலியோ சொட்டு மருந்து முகாம்களும் இன்று காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படும். இதுதவிர பயணத்தில் இருக்கும் குழந்தைகளின் நலனுக்காக முக்கிய பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள் உள்ளிட்ட இடங்களில் 1652 நகரும் மையங்கள் நிறுவப்பட்டு சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

1000 நடமாடும் குழுக்கள் மூலமாக தொலை தூரம் மற்றும் எளிதில் செல்ல முடியாத இடங்களில் வசிக்கும் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

Leave a Reply