ராஜிவ் கொலை வழக்கில் மரண தண்டனையில் இருந்து ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்ட மூன்று பேர்களை தமிழக அரசு விடுதலை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் தடை வாங்கிய மத்திய அரசு, இன்று காலை நளினி உள்பட மேலும் 4 பேர்களை தமிழக அரசு விடுவிக்க எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளது. இதன் காரணமாக நளினி உள்ளிட்ட நால்வர் வெளியாவதிலும் தற்போது சிக்கல் எழுந்துள்ளது.
மத்திய அரசின் இந்த மனுவை உச்சநீதிமன்றம் வரும் 27ஆம் தேதி விசாரணை செய்யப்படும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. எனவே நளினி, ராபர்ட் பயாச், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் அகிய நான்கு பேர்களையும் விடுவிப்பது தொடர்பான உத்தரவு 27ஆம் தேதி வெளிவரும் என தெரிகிறது.
மத்திய அரசின் இந்த நடவடிக்கையால் தமிழக அரசியல் கட்சிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளன.