கன்னியாகுமரி விவேகானந்தர் பாறைக்கு கேபிள் கார். சிரஞ்சீவி

இன்று காலை மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர் சிரஞ்சீவி கன்னியாகுமரிக்கு வருகை தந்தார். அவர் படகு மூலம் விவேகானந்தர் பாறைக்கு சென்று திரும்பிய பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பழநியில் இருப்பது போன்று கன்னியாகுமரி விவேகானந்தர் பாறைக்கு கேபிள் கார் அமைக்கும் ப்அணி விரைவில் தொடங்கப்படும் என்று தெரிவித்தார்.

கன்னியாகுமரியில் தற்போது படகு மூலம் மட்டுமே சுற்றுலாப்பயணிகள் விவேகானந்தர் பாறைக்கு சென்று வருகின்றனர். கடல் கொந்தளிப்பான சில சமயங்களில் விவேகானந்தர் பாறைக்கு படகு போக்குவரத்து நிறுத்தப்படும். அந்த நேரங்களில் சுற்றுலாப்பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்புவர். இந்நிலையை தவிர்க்க, கூடியவிரைவில் விவேகானந்தர் பாறைக்கு கேபிள் கார் அமைக்கும் திட்டம் தொடங்கப்படும் என சிரஞ்சீவி தெரிவித்துள்ளார். மேலும் காங்கிரஸ் ஆட்சியில் மக்கள் நலத்திட்டம் பிரமாதமாக நாடு முழுவதும் செயல்பட்டு வருவதால் வரும் தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடிப்பது உறுதி என்று கூறினார்.

Leave a Reply