இந்திய மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையே நேற்று நடைபெற்ற ஆசியக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. சிறப்பாக விளையாடி சதம் இந்திய அணியின் வெற்றிக்கு வித்திட்ட இந்திய அணியின் கேப்டன் விராட் கோஹ்லி ஆட்டநாயகன் விருது பெற்றார்.
டாஸ் வென்ற இந்திய அணி முதல் பீல்டிங்கை தேர்வு செய்தது. இதனால் முதலில் பேட்டிங் செய்த பங்களாதேஷ் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 279 ரன்கள் எடுத்தது. தொடக்க ஆட்டக்காரர் அனாமுல் ஹக் 77 ரன்களும், முஷாபர் ரஹிம் 117 ரன்களும் எடுத்து பங்களாதேஷ் அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இந்திய அணியின் முகமது ஷமி, முஷாபர் ரஹிம் விக்கெட் உள்பட நான்கு முக்கிய விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.
அதன்பின்னர் பேட்டிங் செய்த இந்திய அணி ஒரு ஓவர் மீதம் இருக்கையில் அதாவது 49 ஓவர்களில் 280 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. விராட் கோஹ்லி 16 பவுண்ட்ரிகள் மற்றும் இரண்டு சிக்சர்கள் துணையுடன் 136 ரன்கள் எடுத்து வெற்றிக்கு வித்திட்டார். பங்களாதேஷ் பந்துவீச்சாளர்களை அவர் பதம் பார்த்ததால் இந்திய அணி மிக எளிதான வெற்றியை பெற முடிந்தது.
இன்றைய போட்டியில் பாகிஸ்தானும் ஆப்கானிஸ்தானும் மோதுகின்றன. இந்த போட்டி பங்களாதேஷ் நேரப்படி மதியம் 2 மணிக்கு ஆரம்பமாகும்