ரயிலை தவறவிட்டால் டிக்கெட் கட்டணம் திரும்ப கிடைக்குமா? நிர்வாகம் விளக்கம்.

ரயில்களை தவறவிட்டால், முன்பதிவு செய்த டிக்கெட்டை கேன்சல் செய்ய முடியாது என சில நாட்களாக செய்திகள் பத்திரிகைகளில் வெளியாகி வருகிறது என்றும் அது தவறான தகவல் என்றும், ரயில் டிக்கெட்டுக்கலை ரத்து செய்து டிக்கெட் பணத்தை திரும்ப பெருவதில் தற்போது நடைமுறையில் உள்ள விதிமுறைகளே தொடர்ந்து கைப்பற்றப்படும் என்றும் ரயில்வே நிர்வாகம் இன்று விளக்கம் அளித்துள்ளது.

டிக்கெட்டுக்களை முன்பதிவு செய்தவர்கள் ரயிலை தவறவிட்டால், ரயில் புறப்பட்ட இரண்டு மணி நேரத்திற்குள் டிக்கெட்டை ரத்து செய்யவேண்டும். அப்போதுதான் பாதிக் கட்டணம் திருப்பித் தரப்படும் என்ற நடைமுறை தற்போது தொடரப்பட்டு வருகிறது. இந்நிலையே தொடரும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

RAC  டிக்கெட் வைத்திருப்பவர்களும், காத்திருப்போர் பட்டியல் டிக்கெட் வைத்திருப்பவர்களும், ரயில் புறப்பட்ட மூன்று மணி நேரத்திற்குப் பின்னர் பயணச் சீ்டடை ரத்து செய்ய முடியாது என்கிற தற்போதைய நடைமுறையும் எப்பொழுதும் போல் தொடரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பத்திரிகைகளில் வெளியான தவறான செய்திகளை பயணிகள் நம்பவேண்டும் என்று ரயில்வே நிர்வாகம் கூறியுள்ளது.

Leave a Reply