ஏற்கனவே விஜயகாந்தின் தேமுதிக கட்சியை சேர்ந்த 7 எம்.எல்.ஏக்கள் அதிமுக பொதுச்செயலாலர் ஜெயலலிதாவை சந்தித்து தங்கள் தொகுதிப்பிரச்சனை குறித்து பேசியதோடு, அதிமுக ஆதரவு எம்.எல்.ஏக்களாகவும் மாறியுள்ளனர். இந்நிலையில் தேமுதிகவின் இன்னொரு விக்கெட் விழுந்துள்ளது.
திருத்தணி தொகுதி எம்.எல்.ஏவான அருண் சுப்பிரமணியம் இன்று காலை முதல்வரை சந்தித்து தங்கள் தொகுதி வளர்ச்சிக்காக உதவுமாறு நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளார். அவருடன் பாமக எம்.எல்.ஏ கலையரசனும் சந்தித்துள்ளார்.
பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழ்நிலையில் கூட்டணி பேச்சுவார்த்தையை விஜயகாந்த் நடத்திக்கொண்டிருக்கும் நிலையில் தனது கட்சியை சேர்ந்த 8வது எம்.எல்.ஏ ஒருவர் முதல்வரை சந்தித்துள்ளது விஜயகாந்தை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.