வாட்ஸ் அப் மூலம் வாய்ஸ் கால். செல்போன் நிறுவனங்கள் அதிர்ச்சி.

 

சமீபத்தில் ஃபேஸ்புக் நிறுவனம் உலகின் 45 கோடி வாடிக்கையாளர்களை கொண்ட வாட்ஸ் அப் நிறுவனத்தை 1900 கோடி அமெரிக்க டாலருக்கு வாங்கியது. ஃபேஸ்புக் நிறுவனத்தின் கைகளுக்கு வாட்ஸ் அப் வந்த பிறகு சில அதிரடி மாற்றங்களை ஏற்படுத்த வாட்ஸ் அப் முடிவு செய்துள்ளது.

இதுவரை வெறும் எஸ்.எம்.எஸ் மூலம் மட்டுமே தகவல்களை பரிமாறிக்கொண்டிருந்த வாட்ஸ் அப் வாடிக்கையாளர்கள் இனிமேல் வாய்ஸ் கால் சேவையையும் பெற முடியும் வகையில் வசதிகள் செய்ய முடிவு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளன. இதனால் இந்தியா உள்பட பல நாடுகளின் செல்போன் நிறுவனங்களின் வருமானம் பெருமளவில் பாதிக்கக்கூடும் என கூறப்படுகிறது.

இந்தியாவில் வாட்ஸ் அப் நிறுவனத்திற்கு கோடிக்கணக்கில் வாடிக்கையாளர்கள் இருக்கின்றனர். இவர்கள் அனைவரும் வாட்ஸ் அப் மூலம் வாய்ஸ் கால் மூலம் பேசத்தொடங்கினால் இந்திய தொலைத்தொடர்பு நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்படும் என தெரிகிறது.

ஏற்கெனவே தென் கொரியா வைச் சேர்ந்த காகோடாக், சீனாவின் வெசாட், இஸ்ரேலின் விபர் ஆகிய நிறுவனங்கள் வாய்ஸ் கால் மூலம் தகவல் பரிமாற்ற சேவை அளிப்பதால் அந்தந்த நாடுகளில் உள்ள செல்போன் சேவை நிறுவனங்களின் வருமானம் வெகுவாக பாதிப்பு அடைந்துள்ளது. இந்த நிலைமை இந்திய செல்போன் நிறுவனங்களுக்கு விரைவில் வரவுள்ளது.

Leave a Reply