முதல்வரை சந்தித்த பாமக எம்.எல்.ஏ கட்சியில் இருந்து நீக்கம்.

kalaiyarasu-meets-jayalalitநேற்று தமிழக முதல்வரை வேலூர் அணைக்கட்டு தொகுதி எம்.எல்.ஏ கலையரசன் சந்தித்து தனது தொகுதியின் வளர்ச்சிக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்துகொடுக்க கேட்டுக்கொண்டார். இதனால் பாமக வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து இன்று பாமக கட்சி நிறுவனம் ராமதாஸ், எம்.எல்.ஏ கலையரசனை கட்சியில் இருந்து நீக்க உத்தரவிட்டுள்ளார். இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் ம.கலையரசு தொகுதியில் உள்ள கட்சியினருக்கு விரோதமாகவும், கட்சி வளர்ச்சிக்கு எதிராகவும் செயல்பட்டு வந்ததுடன், கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு களங்கமும், அவப்பெயரும் ஏற்படும் வகையில் செயல்பட்டு வந்ததால் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் ஆகியோரின் ஒப்புதலுடன் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்படுகிறார்”

எம்.எல்.ஏ கலையரசனுடன் தேமுதிக எம்.எல்.ஏ அருண்சுப்பிரமணியமும் முதல்வரை சந்தித்தார். ஆனால் தேமுதிக சார்பில் அவர் மீது எவ்வித நடவடிக்கையும் இல்லை. இதுமட்டுமின்றி ஏற்கனவே முதல்வரை சந்தித்து அதிமுகவுக்கு ஆதரவு கொடுத்த ஏழு எம்.எல்.ஏக்க:ள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply