சீனாவில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்னர் 3600 ஆண்டுகளுக்கு முன்புள்ள சில மம்மிகளை கண்டுபிடித்துள்ளனர். அந்த மம்மிகளின் உடல்முழுவதும் ஒருவகையான சீஸ் எனப்படும் வெண்ணெய் தடவியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுதான் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ள மிகப்பழமையான வெண்ணெய் என கூறப்படுகிறது. இதில் இருந்து நமது மூதாதையர்கள் 4000 வருடங்களுக்கு முன்பே வெண்ணெயை உபயோகித்து வந்துள்ளனர் என தெளிவாகிறது.
சினாவின் வடமேற்கு பகுதியான Taklamakan Desert என்ற பகுதியில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட இந்த மம்மிகளின் கழுத்து மற்றும் மார்பு பகுதிகளில் பிசுபிசுப்பான பசை போன்ற ஒருவகை பொருள் ஒட்டியிருப்பதை ஆராய்ச்சியாளர்கள் பார்த்தனர். பின்னர்தான் அது வெண்ணெய் என அறியப்பட்டது.
இந்த வகையான வெண்ணெயை ஆராய்ந்த போது பாலுடன் ஈஸ்ட் மற்றும் ஒருசில பாக்டீரியாக்களை கலந்துதான் இந்த வெண்ணெயை அவர்கள் தயார் செய்திருப்பது தெரிய வந்துள்ளது. அதுமட்டுமின்றி கடந்த 8000 ஆண்டுகளாக அந்த பகுதிகளில் வாழும் மக்கள் வெண்ணெயை பயன்படுத்தி வந்திருப்பது தெரிய வந்துள்ளது.
[embedplusvideo height=”300″ width=”500″ editlink=”http://bit.ly/1pBrwk1″ standard=”http://www.youtube.com/v/iSQjY36gjxw?fs=1″ vars=”ytid=iSQjY36gjxw&width=500&height=300&start=&stop=&rs=w&hd=0&autoplay=0&react=1&chapters=¬es=” id=”ep5822″ /]