பிரபல டென்ன்ஸ் வீராங்கனை சானியா மிர்சா கடந்த 2008ஆம் ஆண்டு உத்தரபிரதேசத்தில் நடந்த ஒரு பொது நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது தேசிய கீதம் இசைக்கப்பட்டது. அப்போது அவர் தேசிய கீதத்தை அவமதிக்கும் வகையில் கைகளை பின்னால் கட்டிக்கொண்டு நின்றிருந்ததாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டது. இது தொடர்பாக அவர் மீது தனித்தனியாக மூன்று வழக்குகள் தொடரப்பட்டது.
அதன்பின்னர் சானியா மிர்சா இந்த மூன்று வழக்குகளையும் ஒரே வழக்காக விசாரிக்க கேட்டுக்கொண்டதை அடுத்து மூன்று வழக்குகளும் இணைக்கப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை கடந்த ஆறு ஆண்டுகளாக நடந்து வந்த நிலையில் இன்று இந்த முன்று வழக்குகளையும் நீதிபதி அதிரடியாக தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். வழக்குகளை தொடர்ந்தவர்கள் யாரும் விசாரணைக்கு தொடர்ந்து ஆஜராகாததால் வழக்கு தள்ளுபடி செய்யப்படுவதாக அவர் கூறினார்.
இதனால் சானியா மிர்சா மீதான 6 ஆண்டுகள் தொடர்ந்த ஒரு வழக்கு முடிவுக்கு வந்தது.