ஆஸ்கார் விருது அறிவிப்பு. கிராவிட்டி படத்திற்கு 6 விருதுகள்.

 

86 வது ஆஸ்கார் விருது வழங்கும் நிகழ்ச்சி தற்போது நடந்து வருகிறது. இதில் சிறந்த திரைப்படத்திற்கான விருது 12 Years a Slave என்ற படத்திற்கு கிடைத்துள்ளது., இயக்குனர் ஸ்டீவ் மெக்கூன் இயக்கிய இந்த திரைப்படத்தில் லுபிடா நியாங்கோ, பிராட்பிட், மைகேல் ஃபெசிபெண்டர் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படம் கடந்த 2013 ஆம் ஆண்டு அக்டோபரில் வெளியாகி உலகம் முழுவதும் மாபெரும் வெற்றி பெற்றது.

சிறந்த நடிகைக்கான ஆஸ்கார் விருதை நடிகை கேட் பிளான்செட் தட்டிச்சென்றார். புளூஜாஸ்மின் என்ற படத்தில் சிறப்பாக நடித்ததற்காக அவர் இந்த விருதை பெற்றுள்ளார்.

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கிராவிட்டி படத்திற்கு ஆறு விருதுகள் கிடைத்துள்ளன. இந்த படத்டை இயக்கிய ஆல்போன்ஸ்சோ குவாரன் அவர்கள் சிறந்த இயக்குனருக்கான விருதை பெற்றுள்ளார். சிறந்த படத்தொகுப்பு மற்றும் ஒலிக்கலவை ஆகிய பிரிவிற்கு இந்த படம் ஆஸ்கார் விருதை பெற்றுள்ளது.

சிறந்த நடிகருக்கான ஆஸ்கார் விருது டேலஸ் பையர்ஸ் கிளப் என்ற படத்தில் நடித்த மேத்யூ மெக்கானகி அவர்களுக்கு கிடைத்துள்ளது.

சிறந்த அனிமேஷன் படத்திற்கான ஆஸ்கார் விருது ஃப்ரோஷன் என்ற படம் வென்றுள்ளது.

சிறந்த ஆடை வடிவமைப்பாளர் விருது, கேத்தரின் மார்ட்டினுக்கு ‘தி கிரேட் கேட்ஸ்பை” படத்துக்கு கிடைத்துள்ளது. ஆடை வடிவமைப்பாளர் கேத்தரின் மார்ட்டின் பெறும் 3வது ஆஸ்கார் விருது இது.

சிறந்த ஒப்பனைக் கலைஞர் விருதை ‘டல்லாஸ் பையர்ஸ் கிளப்’ படத்துக்கு லி மற்றும் மாத்யூஸ் பெற்றனர்.

சிறந்த ஆவணப்படமாக ’20 பீட் பிரம் ஸ்டார்டம்”, சிறந்த ஆவணக் குறும்படமாக, ‘தி லேடி இன் நம்பர் 6’ படமும் பெற்றது.

‘டேலஸ் பையர்ஸ் க்ளப்’ படத்தில் நடித்ததற்காக ஜார்டு லெடோவுக்கு சிறந்த துணை நடிகர் விருது கிடைத்துள்ளது.

 

Best picture: 12 Years a Slave

Best director: Alfonso Cuarón (Gravity)

Best actor: Matthew McConaughey (Dallas Buyers Club)

Best actress: Cate Blanchett (Blue Jasmine)

Best supporting actor: Jared Leto (Dallas Buyers Club)

Best supporting actress: Lupita N’yongo (12 Years a Slave

Leave a Reply