99% மதிப்பெண் எடுத்த சீன மாணவன் தற்கொலை முயற்சி.

சீனாவில் உள்ள ஒரு மாணவன் தனது பள்ளித்தேர்வில் 99% மதிப்பெண்கள் எடுத்துள்ளார். ஆனால் தனக்கு 1% மதிப்பெண் குறைந்துவிட்டதை எண்ணி கவலைப்பட்டு அந்த சோகத்தில் ஊசியை எடுத்து தனது வயிற்றில் தனக்கு தானே தண்டனை கொடுத்துக்கொண்டதாக கூறியுள்ளார்.

சீனாவின் Heilongjiang Province என்ற இடத்தை சேர்ந்த 9 வயது சிறுவன் ஒருவன் சமீபத்தில் பள்ளித்தேர்வை எழுதினான். அவன் அந்த தேர்வில் 99% மதிப்பெண் பெற்றான்., ஆனால் தனக்கு கண்டிப்பாக 100% மதிப்பெண் வந்திருக்க வேண்டும் என்றும் எப்படி 1% மதிப்பெண் குறைந்தது என்றே தனக்கு தெரியவில்லை என்றும் கவலையுடன் சக மாணவர்களிடம் கூறி வருத்தப்பட்டு கொண்டிருந்தான். இந்நிலையில் வீட்டிற்கு சென்றவுடன் ஆத்திரத்தில் ஊசியை எடுத்து தனது வயிற்றில் குத்தி தனக்குத்தானே தண்டனை கொடுத்துக்கொண்டான்.

இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த சிறுவனின் தந்தை உடனடியாக சிறுவனை மருத்துவமனையில் சேர்ந்த்து அவனது உயிரைக்காப்பாற்றியுள்ளார். சிறுவனின் வயிற்றில் இருந்த ஊசியை டாக்டர்கள் அறுவை சிகிச்சை மூலம் அகற்றியுள்ளனர்.இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Leave a Reply