மார்ச் 4: முதன்முதலில் லண்டனில் மின்சார டிராம் வண்டி ஓடிய நாள்.

பிரிட்டனில் மின்சாரத்தால் இயங்கும் முதல் டிராம் வண்டி 1882-ம் ஆண்டு மார்ச் மாதம் இதே தேதியில் ஓடவிடப்பட்டது. இந்த டிராம் வண்டி கிழக்கு லண்டனில் தனது முதல் பயணத்தை தொடங்கியது.

இதே நாளில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:

* 1945 – இரண்டாம் உலகப் போர்: பின்லாந்து நாசி ஜெர்மனி மீது போரைத் தொடுத்தது. * 1945 – எலிசபெத் இளவரசி (பின்னர் மகாராணியானவர்) ராணுவத்தில் வாகன ஓட்டுனராக இணைந்தார். * 1959 – ஐக்கிய அமெரிக்காவின் பயனியர் 4 உலகின் இரண்டாவது (அமெரிக்காவின் முதலாவது) செயற்கைக்கோள் ஆனது.

* 1977 – ருமேனியா தலைநகர் புகாறெஸ்ட்டில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் 1,570 பேர் கொல்லப்பட்டனர். * 1980 – றொபேட் முகாபே சிம்பாப்வேயின் முதலாவது கருப்பின பிரதமரானார். * 1994 – கொலம்பியா 16 விண்ணோடம் ஏவப்பட்டது. * 2001 – லண்டனில் பிபிசி தொலைக்காட்சி நிறுவனத்தின் முன்னால் இடம்பெற்ற பெரும் குண்டுவெடிப்பினால் 11 பேர் காயமடைந்தனர்.

* 2001 – போர்ச்சுக்கல்லி பாலம் ஒன்று இடிந்து வீழ்ந்ததில் 70 பேர் கொல்லப்பட்டனர். * 2006 – பயனியர் 10 விண்கலத்துடன் மேற்கொள்ளப்பட்ட கடைசித் தொடர்பு தோல்வியில் முடிந்தது. * 2006 – அசாம் மாநிலத்தின் பெயர் அசோம் என மாற்றப்பட்டது

Leave a Reply