தெலுங்கானா மாகாணம் உருவாக பெரிதும் காரணமாக இருந்த தெலுங்கனா ரஷ்ட்ரிய சமிதி கட்சி தலைவர் சந்திரசேகர ராவ் தனது கட்சியை காங்கிரசுடன் இணைக்கும் திட்டம் எதுவும் இல்லை என்று இன்று செய்தியாளர்களிடம் கூறினார்.
தெலுங்கானா மாநிலத்தின் முதல்வர் பதவிக்கு சந்திரசேகர ராவ் பெயரை முன்மொழிய காங்கிரஸ் மறுத்துவிட்டதால் காங்கிரஸுடன் அதிருப்தி கொண்ட அவர், தனது கட்சியை தொடர்ந்த நடத்த முடிவு செய்துவிட்டதாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி தனது கட்சியின் முக்கிய தலைவராக இருந்த விஜயசாந்தியை காங்கிரஸ் தனது பக்கம் இழுத்துவிட்டது. விஜயசாந்தியை தெலுங்கானா மாநில முதல்வராக்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது என்பதை அறிந்த சந்திரசேகர ராவ் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளார்.
எனவே காங்கிரசுடன் இணைந்து தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதியின் அடையாளத்தை இழப்பதைவிட, தனிக்கட்சியாகவே செயல்படுவதே சிறந்தது என அக்கட்சியின் தலைவர்கள் கருதுவதாகவும் கூறப்படுகிறது.