அமெரிக்காவின் Las Vegas என்ற நகரத்தில் மிகவும் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்த Food 4 Less என்ற மளிகைக்கடையின் உள்ளே திடீரென ஒரு கார் நுழைந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கார் கடையின் உள்ளே சுமார் 80அடிக்கும் மேலே நுழைதிருந்ததால் இந்த விபத்தில் 26 பேர் காயம் அடைந்தனர்
Las Vegas நகரில் உள்ள ஒரு பெரிய மளிகைக்கடைக்கு வெளியே 88 வயது பெண்மணி ஒருவர் காரை பார்க்கிங் பகுதியில் நிறுத்த வந்தார். இந்நிலையில் திடீரென கார் அவரது கட்டுப்பாட்டை மீறி மளிகைக்கடையின் கண்ணாடியை உடைத்துக்கொண்டு சுமார் 80 அடிக்கு கடையின் உள்ளே சென்றது. கடையின் உள்ளே வரிசையாக உட்கார்ந்திருந்த நான்கு கேஷியர்கள் காரினால் அடித்து செல்லப்பட்டனர். இந்த விபத்து காரணமாக அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த விபத்து காரணமாக 17 பேர்களுக்கு லேசான காயமும், 9 பேர்களுக்கு பலத்த காயமும் ஏற்பட்டது. காயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். காரை ஓட்டி வந்த 88 வயது மூதாட்டியிடம் விசாரணை நடந்து வருகிறது. ஆயினும் அவர் கைது செய்யப்படவில்லை என போலீஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்தால் மளிகைக்கடையில் உள்ள ஏராளமான பொருட்கள் சேதமடைந்தன. சேதமதிப்பு கணக்கிடப்பட்டு வருகிறது.
[embedplusvideo height=”300″ width=”500″ editlink=”http://bit.ly/1n5vnE1″ standard=”http://www.youtube.com/v/MUwNZZp4xsM?fs=1″ vars=”ytid=MUwNZZp4xsM&width=500&height=300&start=&stop=&rs=w&hd=0&autoplay=0&react=1&chapters=¬es=” id=”ep1643″ /]