விஸ்வரூபம் படத்தை அடுத்து கமல்ஹாசன் நடிக்கும் உத்தமவில்லன் படத்தின் படப்பிடிப்பு நேற்று முன் தினம் முதல் தொடங்கியது. கமல்ஹாசன் மற்றும் லிங்குசாமி தயாரிக்கும் இந்த படத்தின் நடிகைகள் குறித்து இதுவரை அதிகாரபூர்வ அறிவிப்பு இல்லாமல் இருந்தது. தற்போது இந்த படத்தின் நடிகைகள் குறித்து தகவல்கள் வெளிவரத்தொடங்கி உள்ளது.
இந்த படத்தின் மூன்று நடிகைகள் , ஆண்ட்ரியா, பூஜாகுமார் மற்றும் பார்வதிமேனன். இவர்களில் ஆண்ட்ரியா மற்றும் பூஜாகுமார் ஆகிய இருவரும் ஏற்கனவே கமல்ஹாசனுடன் விஸ்வரூபம் இரண்டு பாகத்திலும் நடித்தவர்கள் என்பது தெரிந்ததே. பார்வதி மேனன் மரியான் படத்தில் தனுஷுடன் நடித்தவர். இவர்கள் மூவரும் உத்தம வில்லன் நாயகிகளாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்தில் இருந்து செய்திகள் கசிந்துள்ளன.
மேலும் இந்த படத்தில் ஆண்ட்ரியா மற்றும் பார்வதிமேனன் இருவரும் கமலுக்கு ஜோடியாக நடிக்கிறார்கள் என்றும் பூஜாகுமார் நெகட்டிவ் கேரக்டரில் நடிக்கிறார் என்றும் கூறப்படுகிறது.