கடந்த ஞாயிறு அன்று ஆசியக்கோப்பை லீக் ஆட்டம் ஒன்றில் இந்திய அணி பாகிஸ்தான் அணியுடன் மோதியது. இந்த போட்டியில் கடைசி நேரத்தில் இரண்டு சிக்சர்கள் அடித்த சாஹித் அப்ரிடி பாகிஸ்தானுக்கு வெற்றியை பெற்றுத்தந்தார். இந்த தோல்வியால் இந்திய அணி இறுதிபோட்டிக்கு செல்லும் வாய்பை இழந்தது.
இந்நிலையில் மீரட் நகரில் உள்ள Swami Vivekanand Subharti University என்ற பல்கலைக்கழகத்தில் படிக்கும் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை சேர்ந்த 67 பேர் பாகிஸ்தான் வெற்றி பெற்றதை விருந்து வைத்து கொண்டாடினர். இதனால் மற்ற மாணவர்களுக்கும் அவர்களுக்கும் மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் கல்வீச்சு உள்பட வன்முறையும் வெடித்தது.
இதனால் பல்கலைக்கழகம் நிர்வாகம் அதிரடி நடவடிக்கை எடுத்து பாகிஸ்தான் வெற்றியை கொண்டாடிய 67 மாணவர்களையும் சஸ்பெண்ட் செய்தது. அதுமட்டுமின்றி அவர்கள் அனைவரையும் மீரட் காவல்நிலையத்தில் ஒப்ப்டைத்தது. இதனால் அந்த பல்கலைக்கழகத்தில் பயிலும் மற்ற காஷ்மீர் மாணவர்கள் பதட்டம் அடைந்துள்ளனர்.