குஜராத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் கைது. டெல்லியில் பரபரப்பு

13தேர்தல் பிரச்சாரத்திற்காக குஜராத் மாநிலம் சென்றுள்ள அரவிந்த் கெஜ்ரிவால், அங்கு தனது தொண்டர்களுடன் பூஜ் நகருக்கு ஊர்வலமாக செல்ல முயன்றார். ஆனால் அவருடைய ஊர்வலத்திற்கு போலீஸார் அனுமதி கொடுக்க மறுத்துவிட்டனர். தடையை மீறி ஊர்வலம் சென்ற அரவிந்த் கெஜ்ரிவாலை குஜராத் போலீஸார் சுற்றி வளைத்து கைது செய்து காவல்நிலையத்திற்கு அழைத்து சென்று சிறிது நேரத்தில் விடுதலை செய்தனர்.

அரவிந்த் கெஜ்ரிவால் குஜராத்தில் கைது செய்யப்பட்டதை அடுத்து, டெல்லியில் உள்ள ஆம் ஆத்மி கட்சியினர் ஆர்ப்பட்டம் செய்தனர். டெல்லி பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்திற்கு உள்ளே நுழைய முயன்ற ஆம் ஆத்மி தொண்டர்களை போலீசார் தடியடி நடத்தி விரட்டி அடித்தனர். இதனால் இரு தரப்பினரிடையை மோதல் ஏற்பட்டது.

ஆம் ஆத்மி கட்சியினர் மீது வஜ்ரா வாகனம் மூலம் தண்ணீர் பீய்ச்சியடிக்கப்பட்டது. பதிலுக்கு ஆம் ஆத்மி கட்சி தொண்டர்கள் காவல்துறையினர் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இதனால் அந்த இடமே போர்க்களம் போல காட்சி அளித்த்து.

மோடியின் உத்தரவின் பேரில்தான் என்னை கைது குஜராத் போலீஸார் கைது செய்தனர் என்று அரவிந்த் கெஜரிவால் குற்றம் சாட்டியுள்ளார். இதனால் டெல்லி அரசியல் வட்டாரம் பெரும் பரபரப்பு அடைந்துள்ளது.

Leave a Reply