3 குழந்தைகளுடன் கடலுக்குள் காரை ஓட்டி தற்கொலைக்கு முயன்ற தாய்.

woman tried suicide

அமெரிக்காவில் உள்ள South Carolina அருகே உள்ள சில்வர் பீச் என்ற கடற்கரையில் ஒரு பெண் தனது மூன்று குழந்தைகளுடன் தான் ஓட்டி வந்த காரை கடலுக்குள் செலுத்தி தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். அவரையும், அவரது குழந்தைகளையும், கடற்கரையில் இருந்த சுற்றுலாப்பயணிகளும், போலிஸாரும் இணைந்து காப்பாற்றினர். இந்த அதிர்ச்சி சம்பவத்தை ஒரு சுற்றுலா பயணி விடியோ எடுத்துள்ளார்.

அமெரிக்காவில் உள 31 வயது Ebony Wilkerson என்ற பெண் நேற்று மாலை தனது மூன்று குழந்தைகளுடன் காரில் பீச்சுக்கு அழைத்து செல்வதாக கூறி, கிளம்பி சென்றார். காரை நேராக பீச்சில் நிறுத்தாமல் மிக வேகமாக கடலுக்குள் காரை செலுத்தியதால் காருக்குள் இருந்த குழந்தைகள் அலறினர். குழந்தைகளின் அலறல் சத்தத்தோடு கார் ஒன்று கடலுக்குள் செல்வதை பார்த்த பீச்சுக்கு வந்த சுற்றுலா பயணிகள், உடனடியாக போலீஸுக்கு தகவல் கொடுத்தனர்.

போலீஸாரும் மீட்புப்படையினர்களும் வருவதற்குள் சுற்றுலாப்பயணிகளே சிலர் தைரியமாக கடலுக்குள் சென்று காரின் கதவை திறந்து குழந்தைகளை காப்பாற்றினர். தங்கள் தாய் தங்களை கொலை செய்ய முயற்சி செய்வதாக குழந்தைகள் கதறி அழுதனர்.

அதன்பின்னர் Ebony Wilkerson மற்றும் மூன்று குழந்தைகளும் பத்திரமாக மீட்கப்பட்டு பின்னர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதுகுறித்து விசாரணை நடத்திய போலீஸார், குடும்பத்தகராறு காரணமாக Ebony Wilkerson, குழந்தைகளுடன் தற்கொலை செய்ய முடிவு எடுத்தது தெரிய வந்தது.

[embedplusvideo height=”300″ width=”500″ editlink=”http://bit.ly/1kA2qla” standard=”http://www.youtube.com/v/gbGzBZeNues?fs=1″ vars=”ytid=gbGzBZeNues&width=500&height=300&start=&stop=&rs=w&hd=0&autoplay=0&react=1&chapters=&notes=” id=”ep6771″ /]

Leave a Reply