ஆசியக்கோப்பை இறுதிப்போட்டி பாகிஸ்தான் அணிக்கும், இலங்கை அணிக்கும் இடையே நாளை பங்களாதேஷ் நாட்டில் உள்ள மிர்புர் மைதானத்தில் நடக்க உள்ளது. அந்நாட்டு நேரம் 2.00 மணிக்கு போட்டி ஆரம்பமாக உள்ளது.
இலங்கை அணி தான் விளையாடி நான்கு போட்டிகளிலும் வெற்றி பெற்று 17 புள்ளிகளுடன் முதல் இடத்தை பெற்றது. பாகிஸ்தான் அணி தான் விளையாடிய நான்கு போட்டிகளில் மூன்று போட்டிகளில் வெற்றி இரண்டாவது இடத்தை பிடித்து இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.
மிஸ்பா உல் ஹக் தலைமையிலான பாகிஸ்தான் அணியில் வேறு மாற்றங்கள் இன்றி, லீக் போட்டிகளில் விளையாடிய அதே வீரர்கள் விளையாட உள்ளனர். இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் அதிரடி ஆட்டம் தந்த அப்ரிடியின் அதிரடி ஆட்டம் இறுதிப்போட்டியிலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கை அணி, கேப்டன் மாத்யூஸ் தலைமையில் மிக வலிமை மிகுந்த அணியாக திகழ்கிறது. மெண்டிஸ், பந்திவீச்சில் நல்ல பார்மில் இருக்கின்றார். பெராரே மற்றும் சங்கரகரா லீக் போட்டிகளில் விளையாடியது போல சிறப்பாக விளையாடி, கோப்பையை வெல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது