மாயமான மலேசிய விமானம் வியட்நாம் கடலில் வீழ்ந்தது. 239 பேர்களும் பலியா?

flight missed

இன்று காலை மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீனா தலைநகர் பீஜிங் நகருக்கு புறப்பட்ட ஒரு பயணிகள் விமானம் திடீரென மாயமாகிவிட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அந்த விமானத்தில் பயணம் செய்த 227 பயணிகள் மற்றும் 12 ஊழியர்களின் கதி என்ன என்பது புரியாத புதிராக  இருந்தது.

இந்நிலையில், காணாமல் போன மலேசிய விமானம் வியட்னாம் நாடு அருகே கடலில் விழுந்து விபத்துள்ளானதாக அதிர்ச்சி தகவல் ஒன்று சற்று முன் வெளியாகியுள்ளது.  இந்த விமானத்தில் பயணம் செய்த சீனாவை சேர்ந்த 160 பேரும், மற்ற நாடுகளை சேர்ந்த 67 பேரும், 12 ஊழியர்கள் உள்பட 239 பேர் உயிரிழந்து இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. இதனிடையே,  மலேசியன் ஏர்லைன்ஸ் தலைமை செயல் அதிகாரி அஹ்மத் ஜுவாஹரி யாஹ்யா கூறுகையில், “விபத்துக்குள்ளான விமானத்தை மீட்கும் பணி போர்க்கால அடிப்படையில்  நடந்து வருவதாக தெரிவித்துள்ளார்.

எம்.எச்.370 என்ற போயிங் விமானம் இன்று அதிகாலை 2.40 மணிக்கு கோலாம்பூர் விமான நிலையத்தில் இருந்து கிளம்பியது. பிஜிங் நகருக்கு சரியாக 6.30 சென்றடைந்திருக்க வேண்டும். ஆனால் விமானம் கிளம்பிய சரியாக மூன்று மணி நேரத்தில் திடீரென காணாமல் போய்விட்டது. விமான கட்டுப்பாட்டு அறையின் தொடர்பையும் அது இழந்துவிட்டது. இதனால் கோலாலம்பூர் விமான நிலையத்தில் பெரும் பதட்டம் ஏற்பட்டுள்ளது.

காணமல் போன விமானத்தை கண்டுபிடிக்கும்படி மலேசிய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த விமானம் காட்டுப்பகுதியில் விபத்துக்குள்ளாகி இருக்கலாம் என கூறப்படுகிறது. இந்த விமானத்தின் பயணம் செய்தவர்களின் உறவினர்கள் கோலாலம்பூர் விமான நிலையத்திலும், பீஜிங் விமான நிலையத்திலும் கதறி அழுதபடி இருக்கின்றனர்.

[embedplusvideo height=”300″ width=”500″ editlink=”http://bit.ly/1cDcdV1″ standard=”http://www.youtube.com/v/hqADoK3ExGM?fs=1″ vars=”ytid=hqADoK3ExGM&width=500&height=300&start=&stop=&rs=w&hd=0&autoplay=0&react=1&chapters=&notes=” id=”ep2371″ /]100 101

 

Leave a Reply