பலத்த எதிர்ப்பு எதிரொலி: விடுதலைசிறுத்தைக்கு மேலும் ஒரு தொகுதி.

karuna and thirumaபல வருடங்களாக திமுக கூட்டணியில் இருந்து வரும் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு அக்கட்சியின் பலத்த எதிர்ப்பு காரணமாக மேலும் ஒரு தொகுதியை ஒதுக்க திமுக தலைமை ஒப்புக்கொண்டுள்ளது. இந்த தகவலை இன்று திருமாவளவன் கட்சி அலுவலகத்த்தில் தெரிவித்தார்.

வரும் பாராளுமன்ற தேர்தல் கூட்டணி உடன்பாட்டில் விடுதலை சிறுத்தைகள், தனது கட்சிக்கு ஐந்து தொகுதிகள் ஒதுக்கும்படி கேட்டுக்கொண்டது. ஆனால் திமுக தலைமை ஒரே ஒரு தொகுதியை மட்டும் ஒதுக்கியதால், கடும் அதிருப்தி அடைந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் நேற்று கருணாநிதி மற்றும் மு.க.ஸ்டாலின் உருவ பொம்மையை எரித்து தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். இதனால் கூட்டணியில் விரிசல் ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டது.

நிலைமையின் விபரீதத்தை உணர்ந்த திமுக தலைமை இன்று காலை திருமாவளவனுடன் கலந்து பேசி திருவள்ளூர் தொகுதியையும் கூடுதலாக ஒதுக்கியது. இதையடுத்து விடுதலைசிறுத்தைகள் சமாதானம் அடைந்ததாக கூறப்படுகிறது.

Leave a Reply