இலங்கைக்கு எதிராக எத்தனை தீர்மானங்களை அமெரிக்கா நிறைவேற்றினாலும், இலங்கையை அமெரிக்காவினால் எதுவும் செய்யமுடியாது என இலங்கை அதிபர் ராஜ்பக்சே இன்று தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
அமெரிக்காவும், அமெரிக்காவுக்கு ஆதரவாக செயல்படும் நாடுகளும், ஐ.நா மற்றும் மனித உரிமை ஆணையாளர்கள் முன் வைக்கும் குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை. ஆதாரங்கள் இல்லாதவை. இந்த தீர்மானங்களை கண்டு இலங்கை ஒருபோதும் அஞ்சப்போவதில்லை.
இலங்கைக்கு எதிராக இதுபோல எத்தனை தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டாலும், இலங்கையை எதுவும் அமெரிக்காவினால் செய்ய முடியாது. எந்த சவாலையும் , அச்சுறுத்தலையும் எதிர்நோக்க அரசு தயார் நிலையில் இருக்கின்றது.
மேலும் இலங்கையில் போதைப் பொருள் பயன்பாட்டை சுத்தமாக இல்லாமல் ஒழிக்க கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நாட்டில் போதைப் பொருள் பயன்பாட்டை அறவே இல்லாமல் ஒழிப்பதற்கு பல்வேறு வழிகளில் அதிஅடி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன. அரசின் இந்த நடவடிக்கைக்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
இவ்வாறு தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு ராஜபக்சே பேட்டியளித்தார்.