கோச்சடையான் விழாவுக்கு கமல்ஹாசன் அழைக்கப்படாதது ஏன்?

kamal and kochadaiyaanரஜினிகாந்த் நடித்த கோச்சடையான் படத்தில் பாடல் வெளியீடு நேற்று சென்னையில் நடந்தது. விழா முடிந்த பின்னர் செய்தியாளர்களுக்கு இயக்குனர் செளந்தர்ய ரஜினிகாந்த் பேட்டியளித்தார். அப்போது ரஜினிகாந்தின் மிக நெருங்கிய நண்பரான கமல்ஹாசன் இந்த விழாவுக்கு அழைக்கப்படாததன் காரணத்தை அவர் செய்தியாளர்களிடம் விளக்கினார்.

கமல்ஹாசன் தன்னுடைய அடுத்த படமான உத்தமவில்லன் படப்பிடிப்பில் மிகவும் பிசியாக இருந்ததால், அவரை நாங்கள் அழைக்கவில்லை என்று கூறினார்.

மேலும் மிகவும் சீனியரான வாலியின் பெயரை வைரமுத்து பெயருக்கு பின்னால் குறிப்பிட்டது ஏன் என்ற கேள்விக்கு செளந்தர்யா பதிலளிக்கும்போது, வாலி கோச்சடையான் படத்தில் ஒரு பாடலை மட்டுமே எழுதினார். ஆனால் வைரமுத்து அந்த ஒரு பாடலை தவிர அனைத்து பாடல்களையூம் எழுதினார். அதனால் அவருடைய பெயர் முதலில் குறிப்பிடப்பட்டுள்ளது என்றும் இதில் வாலியை சிறுமைப்படுத்தும் எண்ணம் சிறிதும் எங்களுக்கு இல்லை என்றும் கூறினார்.

[embedplusvideo height=”300″ width=”500″ editlink=”http://bit.ly/1gkgloe” standard=”http://www.youtube.com/v/3SfPMtQD0s4?fs=1″ vars=”ytid=3SfPMtQD0s4&width=500&height=300&start=&stop=&rs=w&hd=0&autoplay=0&react=1&chapters=&notes=” id=”ep7917″ /]

Leave a Reply