அமெரிக்காவில் சமீபத்தில் நார்மலான குழந்தைகள் மற்றும் குண்டு குழந்தைகள் ஆகியோர்களிடம் நடத்தப்பட்ட சோதனையில் குண்டு குழந்தைகள் நார்மலான குழந்தைகளை விட புத்திசாலித்தனம் குறைவாக காணப்படுகின்றனர் என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
7 வயது முதல் 9 வயது வரை உள்ள 74 குழந்தைகளிடம் இந்த சோதனை நடத்தப்பட்ட போது, குண்டு குழந்தைகள் வகுப்பறையில் ஆசிரியர் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்ல திணறி வருவதாகவும், நார்மலான குழந்தைகள் பலர் சிரமமின்றி பதில் கூறுவதாகவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மேலும் குண்டு குழந்தைகள் தங்கள் உடல் எடையின் காரணமாக பாடங்களை கவனிக்கும் திறன் மிகவும் குறைவாக இருப்பதாகவும், தங்கள் உடல்நலன் குறித்தே அவர்கள் பல நேரங்களில் அவர்களின் நினைவு உள்ளது என்றும் கூறப்படுகிறது.