தேமுதிக பட்டியலை திருப்பி அனுப்பிய பாஜக. கூட்டணியில் மீண்டும் குழப்பம்.

DMDK11பாரதிய ஜனதா கூட்டணியில் இருப்பதாக அறிவித்த தேமுக, 14 தொகுதிகள் கேட்டு, அவை எந்தெந்த தொகுதிகள் என்பதையும் குறிப்பிட்டு எழுத்துபூர்வமான பாஜக தலைமைக்கு அனுப்பியது. அதில் தேமுதிக கேட்டுள்ள 14 தொகுதிகளில் 6 தொகுதிகள் பாமக கேட்ட தொகுதிகள், இரண்டு தொகுதிகள் பாரதிய ஜனதா நிற்க ஆலோசித்துள்ள தொகுதிகள், மேலும் இரண்டு தொகுதிகள் மதிமுக கேட்டுள்ள தொகுதிகள்.

எனவே தேமுதிகவினர்கள் பாரதிய ஜனதா இன்று காலை இதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்தியது. இதில் தேமுதிக தாங்கள் கேட்ட 14 தொகுதிகள் கண்டிப்பாக வேண்டும் என பிடிவாதமாக இருந்ததால், தேமுதிகவின் பட்டியலை இன்று மதியம் பாரதிய ஜனதா கட்சி திருப்பி அனுப்பியது. இதனால் பாரதிய ஜனதா கூட்டணியில் இருந்து தேமுதிக விலகும் நிலை எழுந்துள்ளது.

இன்று மாலை தேமுதிக தனது பொதுக்குழுவின் அவசர கூட்டத்தை கூட்ட இருக்கின்றது. இதில் சில அதிரடி முடிவுகள் எடுக்கப்படும் என்று தெரிகிறது. திமுகவும் தனது வேட்பாளர்களை அறிவித்துவிட்டதால் தேமுதிகவுக்கு வேறு வழியில்லை என்றும் தாங்கள் சொல்வதை கேட்டுத்தான் ஆகவேண்டும் என பாரதிய ஜனதா எண்ணுகிறது. இதனிடையே இன்று செய்தியாளர்களிடம் பேசிய பாரதிய ஜனதாவின் தேசிய பொதுச் செயலாளரும், தமிழக பொறுப்பாளருமான முரளிதர ராவ், தமிழக கூட்டணிக்கு பாரதிய ஜனதா கட்சிதான் தலைமை வகிக்கும், மோடியின் தலைமையை ஏற்றுக்கொள்பவர்கள் மட்டும் கூட்டணியில் தொடரலாம் என்று அதிரடியாக அறிவித்துள்ளதால் தேமுதிக அதிருப்தி கொண்டுள்ளது.

Leave a Reply