சென்னையில் பரவும் “மெட்ராஸ் ஐ”. மருத்துவர்கள் எச்சரிக்கை.

16சென்னையில் தற்போது வேகமாக கண்வலி நோய் பரவி வருவதாக மருத்துவர்கள் சென்னை மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சென்னையில் தற்போது அடினோ என்ற வைரஸ் மூலம் கண்வலி நோய் பரவி வருவதாக மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். பொதுவாக தட்பவெப்ப நிலை காரணமாக ஒவ்வொரு ஜூலை மாதமும் கண்நோய் வருவது வழக்கம் என்றும் ஆனால் இவ்வருடம் முன்கூட்டியே மார்ச் மாதத்திலேயே பரவ ஆரம்பித்துவிட்டதாக மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.

ஏராளமான கண்நோயாளிகள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்து கொண்டிருக்கின்றனர் என்று செய்திகள் தெரிவிக்கின்றன. மெட்ராஸ் ஐ என்று கூறப்படும் கண்நோய் வந்தால் 3 முதல் 5 நாட்களில் குணமாகிவிடும் என்றும் ஆனாலும் மருத்துவர்களின் ஆலோசனைப்படி சொட்டுமருந்து கண்களில் விடவேண்டும் என்றும் எழும்பூர் அரசு மருத்துவமனையின் சீனியர் மருத்துவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply