பாம்பன் பாலத்திற்கு வெடிகுண்டு மிரட்டல். ரயில்வே துறை அதிர்ச்சி

13
ராமேஸ்வரத்தில் சுற்றுலாப்பயணிகளை பெரிதும் கவர்ந்த பாம்பன் பாலத்தை வெடிவைத்து தகர்ப்போம் என மிரட்டல் கடிதம் வந்துள்ளதால் தென்னக ரயில்வே அதிர்ச்சி அடைந்துள்ளது.

நேற்று மாலை சென்னையில் உள்ள  ரயில்வே பாதுகாப்புத் துறையினருக்கு ஒரு கடிதம் வந்தது. மருதுபாண்டியர் குழு என்ற பெயரில் வந்துள்ள அந்த கடிதத்தில் பாம்பன் பாலத்தை வெடிவைத்து தகர்ப்போம் என்று எழுதப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த பாதுகாப்பு துறையினர் உடனடியாக பாம்பன் பாலத்திற்கு பாதுகாப்பை அதிகரிக்க முடிவு செய்துள்ளனர்.

13a

நேற்று வெடிகுண்டு நிபுணர்களும், ராமேஸ்வரம் போலீசாரும் பாம்பன் பாலத்திற்கு சென்று ரயில்வே பாதை முழுவதும் தீவிர சோதனை செய்தனர். இதுவரை எந்தவகை வெடிபொருட்களும் கைப்பற்றப்படவில்லை.

நாட்டின் பிறப்பகுதிகளுடன் ராமேஸ்வரம் தீவை இணைக்கும் வகையில் கடந்த 1914ஆம் ஆண்டு பிப்ரவரி 24ல் பாம்பன் பாலம் கட்டி முடிக்கப்பட்டு ரயில் சேவை தொடங்கப்பட்டது. பாம்பன் பாலத்தின் நூற்றாண்டு விழா கடந்த பிப்ரவரி 24ஆம் தேதி கொண்டாடப்பட்டது.

13b

 

 

Leave a Reply