கடந்த 8ஆம் தேதி கோலாலம்பூரில் இருந்து கிளம்பிய மலேசிய விமானம் கடலில் மூழ்கியிருக்கும் சாட்டிலைட் புகைப்படம் ஒன்றை இன்று சீன அரசு வெளியிட்டுள்ளது. இதனால் மலேசிய விமானம் கடலில் விபத்துக்குள்ளாகியிருப்பது தெரிய வந்துள்ளது.
மார்ச் 9ஆம் தேதி, அதாவது விமானம் விபத்துக்குள்ளான மறுநாள் சீனாவின் சாட்டிலைட் ஒன்றினால் விபத்து நடந்த பகுதியில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை இன்று காலை வெளியிட்டுள்ளது. ஒரு வாரம் கழித்து இந்த புகைப்படத்தை தாமதமாக சீனா வெளியிட்டது ஏன் என்ற புரியாத புதிராக இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த விமானத்தை தேடும் பணியில் 42 கப்பல்களும், 39 விமானங்களும் ஈடுபட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. சுமார் 27000 சதுர மைல்கள் பரப்பளவில் கடந்த ஐந்து நாட்களாக இரவு பகல் பாராமல் விமானத்தை தேடும் பணி நடந்து வந்தது. தற்போது சீன அரசு அறிவித்த பகுதியை நோக்கி கப்பல்களும், விமானங்களும் விரைந்துள்ளன.