புதிதாக கிடைத்த தகவலின்படி மாயமான மலேசிய விமானம் இந்திய கடல் எல்லையில் விழுந்திருக்க வாய்ப்புள்ளது என்பதால் அனைத்து நாடுகளின் கவனமும் தற்பொது இந்திய கடல்பகுதியை நோக்கி திரும்பியுள்ளது. மலேசியாவின் வேண்டுகோளுக்கு இணங்கி இந்தியாவும் தற்போது தேடுதல் வேட்டையில் குதித்துள்ளது. அந்தமான் நிக்கோபார் தீவுகள் பகுதிகளில் தீவிரமாக தேடுதல் வேட்டை நடைபெறும் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் அமெரிக்க வெள்ளை மாளிகை செய்தித்தொடர்பாளர் Jay Carney நேற்று செய்தியாளர்களிடம் பேசியபோது, ‘தங்களுக்கு கிடைத்துள்ள புதிய தகவலின்படி மலேசிய விமானம் இந்திய கடல்பகுதியில்தான் இருக்கும் எனதாங்கள் நம்புவதாகவும், இந்திய கடல்பகுதியில் அமெரிக்க கப்பல் விரைந்து சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபடும் என்றும் தெரிவித்துள்ளார். இதற்காக Guided missile destroyer என்ற அமெரிக்க போர்க்கப்பல் இந்திய கடல் எல்லையை நோக்கி விரைந்து கொண்டு வருகிறது.
ஏற்கனவே 11 நாட்டு கப்பல்கள் மாயமான விமானத்தை தேடி வரும் நிலையில் தற்போது புதிதாக இந்தியாவும் அமெரிக்காவும் இணைந்துள்ளது. இதனால் தேடுதல் வேட்டையில் முன்னேற்றம் இருக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.